ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா, ஆஷா சரத்  நடிப்பில் 2013 ம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்து ஹிட் ஆன படம் தான் திரிஷ்யம் .

நான்காவது வரை படித்த ஒரு சாமானிய மிடில் கிளாஸ் மனிதன் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போடும் திட்டம் தான் படத்தின் முழுக் கதையும்.

இந்தப்படம் அதன் பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று ரீமேக் செய்யப்பட்டு அனைத்திலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

ஏற்கனவே நம்ப தங்கல், பாகுபலி போன்ற படங்கள் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வசூல் ஆன நிலையில், ஒரு சீன நிறுவனம் திரிஷ்யம் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

இந்த நிகழ்வினை படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப் தன் பேஸ் புக் பக்கத்தில் லைவ் விடியோவாக வெளியிட்டார் . நமது தென் இந்திய மொழிப்படம் சீன மொழியில் ரீமேக் ஆவது இதுவே முதல் முறை.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: ஏற்கனவே மாதவன் நடிப்பில், விக்ரம் குமார் இயக்கத்தில் உருவான யாவரும் நலம் உலக சினிமா ரசிகர்களால் பாராட்டப் பட்டது. ஆனால் திரிஷ்யம் படம் இந்திய சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது