fbpx
Connect with us

Cinemapettai

டிக்டாக் உட்பட அனைத்து செயலிக்கும் தடை.. ஆனால் அதற்கு மாற்று செயலிகள் என்ன?

India | இந்தியா

டிக்டாக் உட்பட அனைத்து செயலிக்கும் தடை.. ஆனால் அதற்கு மாற்று செயலிகள் என்ன?

மத்திய அரசு டிக் டாக் உட்பட அனைத்து சீன செயலிகளையும் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் மீண்டும் பேச்சுவார்த்தை முடிந்து சமாதானம் ஆன பின்னர் அந்த செயலிகள் செயல்படுமா என்பது இப்பொழுது தெரியவில்லை.

சீன பொருட்கள், சீனாவில் தயாரித்த செயலிகள் போன்றவற்றை தடை செய்வது மிகவும் நல்லது தான் ஆனால் ஏற்கனவே கோலா, பெப்சி போன்ற பொருட்களை தடை செய்கிறோம் என்று கூறி விட்டு தற்காலிகமாக செயல்படுத்தி விட்டு பின்னர் மீண்டும் அந்த பானங்களை விற்பனை செய்யத் துவங்கினர். அது போன்று இல்லாமல் தடை செய்தால் நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்.

அதற்கு அடுத்தபடி இந்தியாவிலுள்ள மாற்று செயலிகளை பயன்படுமாறு விளம்பரம் செய்ய வேண்டும். யாரோ ஒரு நாட்டுக்காரன் சம்பாதித்துக் கொண்டு போவதற்கு நம்ம ஊரு ஆட்களே சிறிது சம்பாதித்தாலும் பரவாயில்லை. ஆனால் நம்ம ஊரு ஆட்கள் செய்தால் ஆதரவு கொடுப்பார்களா என்றால் சிறிது சந்தேகம் தான்.

tiktok-banned-in-india

tiktok-banned-in-india

ஏனென்றால் நம்ம ஊரில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டுப் பொருட்களை தான் அதிகமாக விரும்பி விரும்பி வாங்கி பழக்கமாகிவிட்டது. தற்பொழுது மத்திய அரசு 59 சீன செயலிகளை தடை செய்து விட்டது அதற்கு மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்படும் செயலிகளை அறிமுகம் செய்து வைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நம்ம கோயம்புத்தூரில் கூட டிக்டாக்கிற்கு மாற்றாக இன்னொரு செயலியை ஆரம்பித்துள்ளனர் அதனைக் கூட விளம்பரமாக பயன்படுத்தலாம் தடை என்றால் முழுவதும் தடை செய்துவிட வேண்டும்.

அதே போல சீன பொருட்களையும் தடை செய்துவிட வேண்டும் அதற்கு மக்களின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். ஆனால் இது எத்தனை நாட்கள் என்று தான் தெரியவில்லை

Continue Reading
To Top