தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் குறித்த வைரல் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.

தமிழ்நாட்டு அரசியலில் முதன்மையாக இருக்கும் கருணாநிதி குடும்பத்தில் இருந்து நடிப்புத்துறைக்கு வந்தவர் உதயநிதி. முதன்முதலில் தயாரிப்பாளராக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் அறிமுகமாகினார். பின்னர், 2012ல் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகனாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து, நகைச்சுவை படமாக நடித்து வந்தவர். கெத்து படத்தின் மூலம் ஆக்‌ஷன் நாயகனாக மாறினார். அதை தொடர்ந்து, வெளியாகிய படங்கள் சுமார் வெற்றியையே பெற்றது. பெரிதாக பேசப்படாமல் இருந்தது.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நிமிர் படத்திலும், சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே அழுத்தமான கதையை கொண்டு இருக்கும் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

நடிப்பில் மட்டுமல்லாது தற்போது உதயநிதி ஸ்டாலின் அரசியலில் களமிறங்கி இருக்கிறார். இதனால், திமுகவின் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டும் வருகிறார். இந்நிலையில் உதயநிதி வெளியிட்ட ஒரு டுவீட்டால் ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொள்ள தொடங்கி இருக்கின்றனர். ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் யார், யார் என்று கண்டுபிடிக்குமாறு ரசிகர்களை கேட்டுள்ளார்.

Twitter

அட யாருப்பா இது என யோசித்த சிலருக்கு அதில் இருந்த பெரிய பையன் உதயநிதி தான் எளிதாக புலப்பட்டது. ஆனால், சிறு குழந்தை யார் என வெகு நேரம் யோசனை தான் நிலவியது. இதை தொடர்ந்து, ரசிகர் ஒருவர் அந்த குழந்தை யார் என்ற உண்மையை உடைத்தார். அட வேறு யாரு? இதே குடும்பத்தில் இருந்து கோலிவுட்டின் மற்றொரு கதாநாயகனாக இருக்கும் நடிகர் அருள்நிதி தானாம் அது. என்னப்பா வைக்கிறாங்க டுவிஸ்டு!