Connect with us

Cinemapettai

முத்தம் தர விடாமல் தடுத்தார்: அதான் தள்ளிவிட்டேன்.. செத்து போய்ட்டா.. பகீர் செய்தி

wife-murdered

Tamil Nadu | தமிழ் நாடு

முத்தம் தர விடாமல் தடுத்தார்: அதான் தள்ளிவிட்டேன்.. செத்து போய்ட்டா.. பகீர் செய்தி

முத்தம் தர விடாமல் என்னை தடுத்துக் கொண்டே இருந்தார். அதனால் தள்ளிவிட்டேன் என்று பள்ளி மாணவி இறந்த வழக்கில் இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்.

மத்திய பிரதேசத்தில் ஜபல்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த மாணவி பிங்கி. இவருக்கு வயது 18. அதே பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர் தன் ஆண் நண்பருடன் கடந்த வியாழக்கிழமை அன்று பிஜாபூரி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு வீட்டுக்கு திரும்பவே இல்லை. இதனால் பதற்றமும் பயமும் அதிகரித்து குடும்பத்தினர் தெரிந்த இடங்களில் எல்லாம் தேடிப் பார்த்து, கிடைக்காத நிலையில் போலீசாரிடம் சென்று புகார் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் அந்த பாய மாணவியின் சடலம் காட்டுக்குள் கிடப்பது தெரிய வந்து அதனை கைப்பற்றினர். உடம்பெல்லாம் காயம் ஏற்பட்ட தலையின் பின் பகுதியில் ரத்தம் உறைந்திருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.

இதனை விசாரித்த போதுதான் ஆண் நண்பர் ராமன் சிங் சயான் என்பவருடன் காட்டிற்குள் சென்றது தெரியவந்தது. பின்னர் அவரை விசாரிக்கையில்,”தான் அந்தப் பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்றதாகவும், அவர் பலமுறை என்னை தடுத்ததால் ஆத்திரமடைந்து கீழே தள்ளி விட்டதாகவும் கூறினார். அதனால் தலையின் பின்பக்கம் அடிபட்டு சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது போலீஸார் ராமன் சிங் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

பெண் பிள்ளைகள் பத்திரமாய் இருங்கப்பா.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top