சிறுமி ஹாசினி கொலை வழக்கு-தஷ்வந்த்துக்கு தூக்கு உறுதி

சிறுமி ஹாசினி கொலை வழக்கில், குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குத்தண்டனை உறுதி என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த 2017 பிப்ரவரி 6ல் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளியான தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது தாயையும் கொலை செய்தான். இந்த வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், தஷ்வந்த் தான் குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்ததுடன் அதிரடியாக தூக்குத்தண்டனை வழங்கி  உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து, தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஆனால்,

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், முடிவில், குற்றவாளி தஷ்வந்த்தின் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி, குற்றவாளி தஷ்வந்த்தின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது இந்த தீர்ப்பால் இனி இதுபோல் தவறு செய்பவர்கள் தக்க தீர்ப்பு என மக்கள் நிம்மதி அடைந்துள்ளர்கள்.