பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் பரிதாபாத் கானோவால் என்ற பகுதியை சேர்ந்த சிறுமி ரெயிலுடன் சேர்ந்து செல்பி எடுக்க விரும்பியிருக்கிறாள்.

கானெவால் ரெயில் நிலையத்தில் செல்பி எடுக்க செல்போனுடன் தண்ட வாளம் அருகே சிறுமி காத்திருந்திருக்கிறாள். அப்போது கராச்சியில் இருந்த ராவல்பிண்டி நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்திருக்கிறது.

அதை அந்த சிறுமி கவனிக்கவில்லை. ‘செல்பி’ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்திருக்கிறாள். அப்போது ராவல்பிண்டி நோக்கி வேகமாக வந்த ரயில் அந்த சிறுமி மீது மோதியது. இதனால் அவள் தூக்கி வீசப்பட்டாள்.

இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அந்த சிறுமியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.

செல்பி மோகத்தால் உலகத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.