fbpx
Connect with us

இப்படியுமா இருப்பார்கள்! தமிழகத்தில் மிரள வைக்கும் குழந்தை வன்கொடுமை

tamil news cinemapettai

News | செய்திகள்

இப்படியுமா இருப்பார்கள்! தமிழகத்தில் மிரள வைக்கும் குழந்தை வன்கொடுமை

குழந்தை வன்கொடுமை உலகமெங்கும் பெருகி வரும் அவலம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. இந்தியாவில் தமிழகத்திலும் குஜராத்திலும்தான் அதிகமாக குழந்தை வன்கொடுமை நிகழ்கிறது.

இதன் ஒரு பகுதிதான் திருவள்ளூர் மாவட்டத்தில் நிகழும் மாத்தம்மா கோவில் திருவிழா. அறிவியல் விஞ்ஞானம் நாகரீகத்தில் முன்னேறி வருவதாக கருதிவரும் இந்த நாளிலும் இந்த கோவில் திருவிழாவில் நிகழும் குழந்தை வன்கொடுமைகள் நம்மை முகம் சுழிக்க வைக்கின்றன.

இந்த கோவில் விழாவில் பத்து வயதிலிருந்து குழந்தைகளை நேர்ந்து விடும் பழக்கம் உள்ளது. வேண்டுதல் மற்றும் நோய் வாய் பட்ட குழந்தைகளை கோவிலுக்கு நேர்ந்து விடுகிறார்கள். நேர்ந்து விட்ட குழந்தைகளுக்கு நிகழும் கொடுமைதான் நெஞ்சை பத பதைக்க வைக்கிறது.

இதில் இரண்டு பூசாரிகள் முதலில் வெறி பிடித்தது போல் அங்கும் இங்கும் ஓடி ஓடி திடீரென்று அங்குள்ள ஒரு ஆட்டினை கடித்து குதறி கொல்கிறார்கள். அதன் பின் கொன்ற அந்த ஆட்டினை வாயால் கவ்வி அங்கும் இங்கும் அழைகிறார்கள்.

அங்கு நேர்ந்து விடுவதற்காக அழைத்து வரப்பட்ட குழந்தைகள் மணப்பெண் போல அலங்கரிக்கப்படுள்ளனர். அக்குழந்தைகளை அங்குள்ள சிறுவர்கள் ஆடைகளை கலைத்து நிர்வாணமாக்கி விளையாடுகின்றனர்.

அதன் பின் நேர்ந்துவிடப்பட்ட பெண் குழந்தைகள் தங்கள் வீட்டிற்கு செல்லக்கூடாதாம், கோவிலில்தான் வாழ்நாள் முழுதும் தங்க வேண்டுமாம். அந்த குழந்தையை யார் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாமாம். இதில் சொந்த உறவினர்களும் உறவு கொள்ளலாமாம்.

அச்சிறுமிகள் கர்ப்பமாகி குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை அப்படியே விட்டு விட்டு வேறு ஒருவருடன் உறவு கொள்ள அனுமதியுண்டாம். இதில் உச்சகட்டம் இந்த திருவிழா காவல் துறை கட்டுப்பாட்டில் நடப்பதுதான்.

இது பற்றிய டாக்குமென்டரி இங்கு காண்க

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:
94.8% of rape cases saw children being raped by someone they knew, not strangers.
These acquaintances include neighbors (3,149 cases) who were the biggest abusers (35.8%).
10% of cases saw children being raped by their own direct family members and relatives

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top