தரமான திட்டங்களால் கொரோனாவை எதிர்த்து சாதனை புரிந்த முதல்வர் எடப்பாடியார்.. வெற்றி நடை போடும் தமிழகம்!

கடந்த ஆண்டு உலகையே அலறவிட்ட பிரச்சனைதான் கொரோனா வைரஸ் பிரச்சினை. இந்தப் பிரச்சனையை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல்  உலகிலுள்ள நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் தலையை பித்துக் கொண்டு இருந்தனர்.

மேலும் சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ், உலக நாடுகளை மிரட்டி வருவதோடு, தற்போது மறு உருவம் எடுத்து மீண்டும் தீவிரமாக பரவி வருகிறது.

அதேபோல், தமிழகத்திலும் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. ஆனால் இதனை தமிழக அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், தமிழக அரசு எடுத்த தரமான நடவடிக்கைகளை இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள்  வியந்து பார்த்தனர்.

அந்த வகையில் தமிழக அரசு கொரோனாவை எதிர்த்து என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தனர் என்பதை கீழே காண்போம்.

  • பொது முடக்க காலத்திலும், ஏழை மக்களின் பசியை தீர்க்க வழங்கப்பட்ட இலவச ரேஷன் பொருட்கள்.
  • வீடு தேடி வந்த காய்ச்சல் முகங்கள்.
  • ஒரு கோடி தமிழக மக்களுக்கு இலவச RT-PCR பரிசோதனை.
  • கொரோனாவை தமிழக அரசில் உள்ள அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு எதிர்த்தது.
  • இந்திய அளவில்  கொரோனா மீட்பு விகிதத்தில்  முதலிடத்தை தமிழகம் பிடித்தது.
  • தமிழக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற அறிவிப்பு.
  • இந்திய அளவில் கொரோனாவால் இறந்தவர்களின் இறப்பு விகிதம் தமிழகத்தில் மிக மிகக் குறைவு.

எனவே, இதுபோன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசு கொரோனாவை பெருமளவு கட்டுப்படுத்தி இருக்கிறது. இது இந்திய அளவில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

edappadi-k-palaniswami-2
edappadi-k-palaniswami-2
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்