Connect with us
Cinemapettai

Cinemapettai

சொன்ன சொல்லை நிறைவேற்றும் முதல்வர்.. தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம்!

edappadi-palaniswami-1

Tamil Nadu | தமிழ் நாடு

சொன்ன சொல்லை நிறைவேற்றும் முதல்வர்.. தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம்!

தமிழகத்தில் எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் இவரது நலத் திட்டங்களால் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக உருப்பெற்றிருக்கிறது.

ஏற்கனவே முதல்வர்  தமிழகத்தில் 2000 “அம்மா மினி கிளினிக்குகள்’ தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதன் முதற்கட்டமாக இன்று 630 கிளினிக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ‘மினி கிளினிக்குகள்” திட்டத்தை முதல்வர் பழனிசாமி, சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்துள்ளார்.

அதாவது சென்னையில் மட்டும் 47 இடங்களில் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கிளினிக்குகள் காலை 8 மணி முதல்  12 மணி வரையிலும், மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், இந்த கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியாற்றுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கிளினிக்குகளை மக்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை, ஹீமோகுளோபின் பரிசோதனை, சாதாரண சளி காய்ச்சல் போன்றவற்றிற்காக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மினி கிளிக்குகள் கிராமப்புறங்களில் 1400 எண்ணிக்கையிலும், சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் மின் கிளினிக்குகள் 200 என மொத்தம் 2000 கிளினிக்குகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

mini-clinic-1

mini-clinic-1

எனவே, பேரிடர்களான புயல், மழை, வெள்ளம், வைரஸ்  தொற்று போன்றவற்றினால் ஏற்பட்ட நிதி  பற்றாக்குறைக்கு மத்தியில், முதல்வர் சொன்ன  சொல்லைக் காப்பாற்றி வருவதை கண்ட மக்கள் பலர், எடப்பாடியாருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top