மதத்தை பார்த்து ஆட்சி செய்பவர்கள் அதிமுகவினர் அல்ல.. முதல்வரின் அதிரடியான பிரச்சார பேச்சு!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது தமிழகத்தை ஆட்சி புரிந்துவரும் எடப்பாடி கே பழனிசாமி அவரது கட்சியான அதிமுகவின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் எடப்பாடியார் பிரச்சாரத்தின்போது மதத்தின் அடிப்படையில் அதிமுக ஆட்சி செய்யவில்லை என்று அதிரடியாக பேசியுள்ளார்.

அதாவது பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடியார், மதத்தின் அடிப்படையில் சாதியின் அடிப்படையில் வாக்குகளை பெற சில காட்சிகள் முயற்சி செய்து வருவதாகவும், அதிமுகவை பொறுத்தவரை அந்த மாதிரியான ஆட்சி இதுவரை நடந்ததில்லை என்றும், எம்ஜிஆர் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது கூட மதம் பற்றிய பேச்சு ஏற்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், மதத்தை பார்த்து கட்சி நடத்துவது அதிமுக அல்ல என்று குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடியார். இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடியார், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது என்றும், நாட்டிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

edapaddi-palaniswami-3
edapaddi-palaniswami-3

மேலும் இறுதியாக பேசிய எடப்பாடியார், இந்த மண்ணில் பிறந்த அனைத்து மதத்தினருக்கும் அதிமுக அரசு முழு பாதுகாப்பு அளிக்கும் என்றும், அதிமுக அரசின் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்றும், சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

Trending News