எதிர்க்கட்சியை அதிரவைத்த முதல்வரின் அதிரடியான பிரச்சார பேச்சு.. செல்போன் மூலம் மக்கள் குறைதீர்க்க திட்டம்!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தின் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது அதிமுக கட்சியின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ள எடப்பாடியார் அதிரடியான பல திட்டங்களையும் அறிவித்து வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல், ஆவடியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடியார், எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததாக சொல்லப்படுகிறது.

ஏனென்றால், சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், தான் சொல்வதைத்தான் எடப்பாடியார் செய்து வருகிறார் என்று பிரச்சாரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடியார் ஆவடியில் நடத்திய பிரச்சாரத்தின்போது, ‘விவசாய கடன் தள்ளுபடி பற்றி இதுவரை திமுக எம்பிக்கள் யாரும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவில்லை. அது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோன்று ஸ்டாலின் நடத்திவரும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற கிராம சபை கூட்டங்களை விமர்சித்து, ‘குறைகளை பெட்டியில் போடுவது பழைய காலம், வீட்டிலிருந்தே அரசை தொடர்பு கொள்ள செல்போன் மூலம் மக்கள் குறை தீர்க்கும் திட்டத்தை ஒரே வாரத்தில் தொடங்கப் போகிறேன்’ என்று எடப்பாடியார் தெரிவித்துள்ளாராம்.

மேலும் எடப்பாடியார் பேசும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்  விடுதலை விவகாரத்தில் போலி நாடகம் ஆடுவது எதிர்க்கட்சி தான் என்றும், 7 பேரும் 28 ஆண்டுகளாக சிறையில் இருப்பதற்கு காரணம் திமுக தான் என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக பேசிய முதல்வர், ‘ஸ்டாலின் துணை முதல்வராகவும் மேயராகவும் இருந்தபோது ஏன் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்