Connect with us
Cinemapettai

Cinemapettai

முழுமூச்சாக பிரச்சாரத்தில் இறங்கிய தமிழக முதல்வர்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!

edapaddi-palanisami-admk-1

Tamil Nadu | தமிழ் நாடு

முழுமூச்சாக பிரச்சாரத்தில் இறங்கிய தமிழக முதல்வர்.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!

தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால்  ஒவ்வொரு கட்சியினரும் தங்களது பிரச்சாரத்தை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.

மேலும் அரசியல் ஜாம்பவான்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் காலத்திற்குப் பிறகு முதன்முறையாக நடைபெறும் தேர்தல் என்பதால் அந்தந்த கட்சிகள் முழுமூச்சுடன் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியான சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி தொகுதியில், கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி  தனது பிரச்சாரத்தை தொடங்கியதோடு, சாலையில் நடந்து சென்று  எடப்பாடி பகுதி மக்களை சந்தித்து அவர்களிடம் உரையாற்றினார்.  இந்தப் பிரச்சார நிகழ்வு மக்களிடம் தனிப்பட்ட தொடர்பை எடப்பாடியாருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

மேலும் எடப்பாடியார் தனது பிரச்சாரத்தின் போது, அதிமுக கட்சியின் 10 ஆண்டு சாதனைகளையும், 2017 முதல்  எடப்பாடி யார் செய்த சாதனைகளையும் முன்வைத்து உரையாற்றி வருகிறார். அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை கொங்கு பகுதியில் தொடங்கி, காவிரி டெல்டா பகுதி, தமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதி என அனைத்து பகுதிகளிலும் நடத்த உள்ளாராம்.

ஒருபுறம் எதிர்க்கட்சித்தலைவர் ஜூம் வழியாக கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்த வேளையில், மறுபுறம் எடப்பாடியாரோ கிட்டத்தட்ட 30 மாவட்டங்களுக்கு நேரில் சென்று பேரிடரை ஆய்வு செய்ததோடு, பல நிவாரண உதவிகளையும் வழங்கினார். இவருடைய இந்த அணுகுமுறை மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல், முதல்வரின் எளிமையான, இயல்பான அணுகுமுறையும், அவருடைய உரையாடல்களும் தமிழக மக்களை பெருமளவில் ஈர்த்து வருகிறது. அதேபோல், எடப்பாடியாரின் நலத் திட்டங்களால் தற்போது தமிழகம்  இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது. இதைப்பார்த்த எதிர்க்கட்சியினரும், எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்றபோது அவரை விமர்சித்தவர்களும் தற்போது வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.

மேலும் எடப்பாடியாரின் அரசியல் யுக்திகளையும், நிர்வாகிக்கும் திறமையையும் பார்த்த எவராலும் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு அரசியல் வெற்றிடம் இருப்பதாக சொல்ல முடியாது. அந்த அளவிற்கு சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார் எடப்பாடியார்.

எனவே, தனது கடுமையான முயற்சியாலும் உழைப்பாலும் தமிழகத்தையும் பட்டை தீட்டி தான் ஒரு அனுபவமுள்ள அரசியல்வாதி மற்றும் திறமையான நிர்வாகி என நிரூபித்துக் காட்டிய எடப்பாடியார், தற்போது 2021 சட்டமன்றத்  தேர்தலுக்கான  பிரச்சாரத்தில் முழு வீச்சுடன் இறங்கி இருக்கிறாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top