Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

பேரிடர் காலத்திலும் முதலீடுகளை ஈர்த்து, தமிழகத்தை தொழில் மாநிலமாக மாற்றிய முதல்வர்.. மகிழ்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் முதலமைச்சராக எடப்பாடி கே பழனிசாமி சிறப்பான ஆட்சியை புரிந்து வருகிறார். மேலும் பல்வேறு திட்டங்களின் மூலம் தமிழகத்தை எல்லாத்துறைகளிலும் செதுக்கி வருகிறார் முதல்வர்.

அந்த வகையில் முதல்வர் தற்போது தமிழகத்தில் ரூபாய் 25,213 கோடி முதலீட்டில் 26-கும் மேற்பட்ட தொழில் திட்டங்களுக்கு அனுமதியை வழங்கி தமிழகத்தை வளர்ச்சி பாதையை நோக்கி வழிநடத்தி செல்கிறார்.

அதாவது தமிழக முதல்வர் தலைமையில் முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச்சாளர  அனுமதிகளுக்கான  குழுவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, 26 தொழில் திட்டங்களுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இதனால் தமிழகத்தில்  49,000  நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார் தமிழக முதல்வர்.

எனவே தமிழக முதல்வர் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பின்வரும் திட்டங்களுக்கான அனுமதியை அளித்துள்ளார்:

  • எம்ஆர்எப் புத்துணர்வு ஒப்பந்தம்
  • ராம்ராஜ் நிறுவனத்தின் ஆடைகள் மற்றும் துணிகள் உற்பத்தி திட்டம்
  • மோபிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உற்பத்தி திட்டம்
  • Seoyon E-HWA Automotive India Private Limited நிறுவனத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தி திட்டம்
  • Kyungshin Industrial Motherson Private Limited நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்
  • பீன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்
  • ஆத்தர் எனர்ஜி நிறுவனத்தின் மின்சார வாகனங்கள் உற்பத்தி திட்டம்
  • இன்டர் கிரேட்டர் சென்னை பிசினஸ் பார்க் நிறுவனத்தின் தொழில் பூங்கா திட்டம்

இது போன்ற பல திட்டங்களை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பூர், நாமக்கல், கோயம்பத்தூர், பெரம்பலூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இது தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை என்று கூறும் எதிர்க்கட்சிகளை வாயடைத்துப் போக வைத்துள்ளது.

எனவே தமிழகத்தில் பின்தங்கியிருக்கும் பகுதிகளிலும் முன்னணி தொழில் நிறுவனங்களை உருவாக்கி அங்குள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் எடப்பாடியார்.

இவ்வாறு தமிழகத்தின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அயராது உழைக்கும் எடப்பாடியார் ஆட்சியை கண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திகைத்து நிற்கின்றனர்.

edapaadi

edapaadi

Continue Reading
To Top