Tamil Nadu | தமிழ் நாடு
மதுரை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்த முதல்வர்! தேவை அறிந்து செயல்படும் தமிழக அரசு!
தமிழகத்தில் தற்போது முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அம்மா வழி வந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது.
மேலும் இவரது நலத் திட்டங்களால் தமிழகம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இதனால் தமிழகத்தை மற்ற மாநிலத்தவர் வியந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு முழுக்க முழுக்க காரணம் எடப்பாடியாரின் சிறப்பான ஆட்சி தான்.
ஏற்கனவே பல்வேறு துறைகளில் தமிழகத்தை பட்டை தீட்டிய எடப்பாடியார், தற்போது மதுரையில் உள்ள தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்துவைக்கும் விதமாக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
அதாவது தமிழகம் முழுவதும் 76 கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட 40 லட்சம் புதிய குடிநீர் இணைப்புகளிலிருந்து, ஏழு லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டதாம்.
இந்த நிலையில், தற்போது மதுரைக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் வினியோக திட்டம் ஒன்றை முதல்வர் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தத் திட்டம் வரும் 2023 ஆம் ஆண்டு நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது.
இதன்மூலம் மதுரையில் 1.10 லட்சம் கூடுதல் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, மதுரை மக்களின் தண்ணீர் பற்றாக்குறை தீர்த்து வைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் திட்டத்திற்கு ரூபாய் 1,295 கோடி மதிப்பீட்டில் அம்ரூட் குடிநீர் திட்டத்தை மதுரையில் செயல்படுத்த உள்ளதாகவும், அதற்காக அடிக்கல் நாட்ட இன்று முதல்வர் மதுரைக்கு சென்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே, இவ்வாறு தமிழகத்தில் உள்ள மக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் முதல்வருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.
