Connect with us

Cinemapettai

சொத்துக்காக முதல்வரின் மகன் கொலை.. மருமகள் கைது.?

rohit-sharma-diwary

India | இந்தியா

சொத்துக்காக முதல்வரின் மகன் கொலை.. மருமகள் கைது.?

உத்தரபிரதேச மாநிலத்தில் உத்தரகாண்ட் பகுதியில் முதல்வராக இருந்தவர் என் டி திவாரி. இவருடைய மகன் ரோஹித் சேகர் திவாரி வயது 40 கடந்த 16ம் தேதி அவருடைய வீட்டில் மூக்கில் ரத்தம் வந்த படி மயங்கி கிடந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் அதாவது இவர் கழுத்து நெரித்து மூச்சுத் திணறி இறந்து உள்ளதாகவும் அதன் பின்னர்தான் மூக்கில் ரத்தம் வந்ததாகவும் மருத்துவர்கள் அவரது ரிப்போர்ட்டில் தெரிவித்தனர். அந்த ரிப்போர்ட்டை எடுத்து போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். ரோஹித் சேகர் திவாரி வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

ஏழு கேமராக்களில் இரண்டு கேமராக்கள் வேலை செய்யாமல் இருந்தது தெரியவந்தது. மேலும் சொத்துக்காக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திற்கான வீட்டில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை செய்து வந்தனர்.

ஆனால் தற்போது ரோஹித் சேகரின் மனைவியிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்து வருகின்றனர். இன்னும் யார் யார் கொன்றது என்னும் தகவல் கிடைக்கவில்லை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top