Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னையின் வறட்சியை போக்கிய முதல்வர்.. 76 ஆண்டுகளுக்கு பிறகு உருவான தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்!

சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் குடிநீருக்காக  தத்தளிப்பது பலகாலமாக நடந்து வருகிறது. தற்போது இதனை போக்கும் வகையில் புதிய நீர்த்தேக்கம் ஒன்றை முதல்வர் எடப்பாடியார் உருவாக்கி சாதனை புரிந்திருக்கிறார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது சென்னை மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏற்கனவே திருவள்ளூரில் உள்ள பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், கடலூரில் உள்ள வீராணம் ஏரி உட்பட ஐந்து ஏரிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை கிராமங்களிலுள்ள  இரண்டு ஏரிகளை இணைத்து புதியதாக கண்டிகை நீர்த்தேக்கம் என்ற ஒரு புத்தகத்தை பொதுமக்களுக்காக உருவாக்கி உள்ளது தமிழக அரசு.

அதாவது அம்மாவின் கனவு திட்டமான இந்த அணை 2013ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 380 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. தற்போது ஆயிரத்து 485 ஏக்கர் பரப்பளவில் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் இந்த ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர், கண்டலேறு- பூண்டி கால்வாயில் இருந்து 8.60 கிலோமீட்டர் நீளத்திற்கு இணைப்பு கால்வாய் அமைக்கப்பட்டு இங்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறுகின்றனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு அனுதினமும் 65 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும் நீர்த்தேக்க சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கும் பாசன வசதி கிடைக்கும் வகையில் ஐந்து மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தில் நீர் அளவை தளத்தின் மேல் பகுதியில் இருந்து நீர்த்தேக்கத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கும் வகையில் ‘Viewpoint’ ஒன்றும், நீரோட்டத்தை கண்காணிக்கும் வகையில் நீர்தேக்கத்திற்கு அருகிலேயே ஆய்வு மாளிகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதில் நீர்த்தேக்கத்தை பராமரிக்கும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் சென்னையில் குடிநீர் பயன்பாட்டிற்காக கடைசியாக 1944ஆம் ஆண்டு தான் பூண்டியில் சத்தியமூர்த்தி நீர் தேக்கம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் 76 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நீர்த்தேக்கத்தை எடப்பாடியார் உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.

எனவே, இவ்வாறு சென்னை மக்களின் நீர்த் தேவையை அறிந்து அவர்களது துயரை போக்கும் வகையில், புதியதாக நீர்த்தேக்கத்தை அமைத்து சாதனை புரிந்த தமிழக முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து வருகின்றனர் சென்னை வாழ் மக்கள்.

Continue Reading
To Top