fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

புலம்பெயர்ந்த தமிழர்களை புதிய திட்டத்தால் ஒன்றிணைக்கும் முதல்வர் எடப்பாடி! குவியும் பாராட்டுக்கள்!  

Tamil Nadu | தமிழ் நாடு

புலம்பெயர்ந்த தமிழர்களை புதிய திட்டத்தால் ஒன்றிணைக்கும் முதல்வர் எடப்பாடி! குவியும் பாராட்டுக்கள்!  

தமிழகத்தின் மாண்புமிகு அம்மா வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு நலத் திட்டங்களால் தமிழகத்தை  இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளது நாம் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார்.

அதாவது அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் உள்ள தமிழர்களையும், மற்ற 38 நாடுகளைச் சார்ந்த தமிழர்களையும் ‘விர்ச்சுவல் என்கிளேவ்’ மூலம் மூன்று நாள் இணைக்க தமிழக முதல்வர் திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக முதல்வர் ‘யாதும் ஊரே குலோபல் கான்கிளேவ்’ திட்டத்தினை அக்டோபர் 29ஆம் தேதி முதல் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகி வந்துள்ளன.  மேலும் 2019ஆம் ஆண்டு  அமெரிக்காவில் புலம்பெயர்ந்த தமிழர்களால் இந்த முயற்சி  உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது உலகிலுள்ள அனைத்து தமிழர்களின் தமிழ் சகோதரத்துவ உணர்வை கொண்டாடும் வகையில், உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைக்கும் ஒரு சர்வதேச  எக்ஸ்போ போன்ற நிகழ்வுகளும் இந்தக் கூட்டத்தில் நடைபெற உள்ளதாம்.

மேலும் இந்த மாநாட்டை முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைக்கப் போவதாக தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சபையின் தலைவர் ஆர் ஆர் எம் அருண் பிரபல பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்களையும் கருத்தில் கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்திவரும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top