Connect with us
Cinemapettai

Cinemapettai

திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர்.. 2,000 கோடி ரூபாயில் டிஎன்பிஎல் தொழிற்சாலை திட்டம்!

edapaddi-palanisami-admk-1

Tamil Nadu | தமிழ் நாடு

திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர்.. 2,000 கோடி ரூபாயில் டிஎன்பிஎல் தொழிற்சாலை திட்டம்!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி கே பழனிசாமி முதல்வராக ஆட்சி செய்து வருகிறார். இவரது நலத்திட்டங்களால் தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக மாறியுள்ளது.

தற்போது வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு கட்சிகளும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று பிரச்சாரம் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது இன்று முதல்வர் எடப்பாடியார் திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அதன்பிறகு, ராஜ கோபுரம் முன்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசிய முதல்வர், முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் நலத்திட்டங்களால் தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குவதாக தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து எடப்பாடியார், திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்ட பணிகளை குறித்து விவரித்ததோடு, திருச்சியில் உள்ள டிஎன்பிஎல் தொழிற்சாலையை 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தார். அதேபோல், முக்கம்பு கதவணை திட்டப்பணிகள் இனிவரும் மூன்று மாத காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் எடப்பாடியார், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி  அதிமுகவின் கோட்டையாக இருக்கவேண்டும்  என்று  கூறியுள்ளாராம். இதற்காக பொதுமக்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அப்பகுதி மக்களிடம் அறிவுறுத்தி உள்ளாராம்.

எனவே  முதல்வர் அளித்துள்ள இந்த புதிய வாக்குறுதிகளால் திருச்சி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கின்றனராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top