Connect with us
Cinemapettai

Cinemapettai

edapadi-palanisamy

Tamil Nadu | தமிழ் நாடு

முதலமைச்சர் எடப்பாடியாரின் தாயார் திடீர் மரணம்! சோகத்தில் ஆழ்ந்த தமிழகம்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இந்த கொரோனா காலகட்டத்திலும் சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

அப்படிப்பட்ட இந்த நேரத்தில் எடப்பாடியாரின் தாயார் உடல்நிலை குறைவால் திடீரென்று நேற்று இரவு 11 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.

இந்த செய்தியை கேட்ட முதல்வர் பெரும் துயரத்தில் ஆழ்ந்து, சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வட்டம் சிலுவம்பாளையத்திற்கு விரைந்துள்ளார்.

மேலும் முதல்வரின் தாயாரான தவசி அம்மாவிற்கு வயது 93. தவசி அம்மாளுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் கோவிந்தராஜ் என இரு மகன்கள் உள்ளனர்.

தற்போது, முதல்வரின் தாயாரின் மரணச் செய்தியை கேட்ட அரசியல் பிரமுகர்களும் திரைத்துறையினரும் பொதுமக்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் தமிழகமே அம்மையாரின் மறைவிற்கு சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவருடைய இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Continue Reading
To Top