இஸ்லாமியர்களின் உரிமையை கட்டாயம் காப்போம்.. அதிமுக கட்சியின் சார்பில் முதல்வர் எடப்பாடி பேச்சு!

தமிழகத்தில் வருகின்ற மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தங்களது கட்சிக்கான பிரசாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கட்சியின் சார்பாக ஊர் ஊராக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்றைய பிரச்சாரத்தின் போது, இஸ்லாமியர்களின் உரிமைகள் காக்கப்படும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

அதாவது இன்று கோவை மாவட்டத்திலுள்ள குறிச்சியில் இஸ்லாமிய மக்களிடையே  எடப்பாடியார் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய எடப்பாடியார் மத்திய அரசின் சட்டங்கள் குறித்து இஸ்லாமிய மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், எந்த சூழ்நிலையிலும் இஸ்லாமியர்களின் உரிமைகள் அனைத்தும் காக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல், இஸ்லாமியரின் உரிமைகளை அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது என்றும், இஸ்லாமியர்களுக்கு துணை நின்று வழிநடத்தும் என்றும் முதல்வர் பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடியார், ‘யாரும் யாரையும் விரட்ட முடியாது. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வதற்கான உரிமை உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.

எனவே, எடப்பாடியாரின் இந்த நம்பத்தகுந்த வாக்குறுதிகளை கேட்ட இஸ்லாமிய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனராம்.

edappadi
edappadi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்