தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சந்தித்தார்.

கடந்த 41 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். போராட்டக்காரர்களிடம் பேசிய முதலமைச்சர் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாகவும், அதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.