தமிழுக்கு துரோகம் செய்த வேட்டி கட்டிய தமிழன்..! - Cinemapettai
Connect with us

Cinemapettai

தமிழுக்கு துரோகம் செய்த வேட்டி கட்டிய தமிழன்..!

chidambaram

தமிழுக்கு துரோகம் செய்த வேட்டி கட்டிய தமிழன்..!

பல்வேறு மொழிகள், தேசிய இனங்கள், பண்பாடுகளை அழித்து ஹிந்தியை அனைத்து மட்டங்களிலும் நடைமுறைப்படுத்தும் முயற்சியில் மத்தியில் ஆளும் பாஜக ஈடுபட்டுள்ளது.

காங்கிரஸ் முன்மொழிந்த திட்டத்தை பாஜக நடைமுறைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

2011ம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்பித்த ஹிந்தி மொழி தொடர்பான பரிந்துரைகளுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு ஹிந்தி பேசாத மாநிலங்களில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த பரிந்துரைகள் அனைத்தும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அமைக்கப்பட்ட நிலைக்குழுவின் தலைவர்,, அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் முன்மொழியப்பட்டவை. ஒரு தமிழராக இருந்துகொண்டு ஹிந்தி மொழியை முன்னிலைப்படுத்தி இருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

அந்த பரிந்துரைகள் பின் வருமாறு:

1.குடியரசுத்தலைவர், பிரதமர், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள் இனி நாடாளுமன்றத்திலும், பொது விழாக்களிலும் ஹிந்தியில் தான் பேச வேண்டும்.

  1. விமானங்களில் முதலில் ஹிந்தியிலும், அதனைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும்.
  2. இனி விமானங்களில் வழங்கப்படுகின்ற செய்தித்தாள்கள், மற்றும் பத்திரிகைகள் 50 சதவிகிதம் ஹிந்தி மொழியிலேயே இருக்க வேண்டும். ஏர் இந்தியா விமான டிக்கெட்டுகளில் இனி பெருமளவு ஹிந்திதான் பயன்படுத்தப்பட வேண்டும்.
  3. மத்திய அரசின் டோராடூன் ஐ.ஏ.எஸ் பயிற்சி நிலையத்தில் அனைத்து பயிற்சி ஏடுகளும் ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்.
  4. பள்ளிக் கல்வியில் ஹிந்தி கட்டாய பாடமாக சேர்க்கப்பட வேண்டும். முதல் கட்டமாக சி.பி.எஸ்.சி மற்றும் கேந்திரிய வித்யா பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாய பாடமாக வைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு பேசி கொள்கை முடிவு வகுக்க வேண்டும்.

6. ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் அமைந்துள்ள    பல்கலைக்கழகங்கள்,கல்வி நிறுவனங்களில், தேர்வுகள் மற்றும் நேர்முக  தேர்வுகளில் ஹிந்தியில் பதில் அளிப்பதை விருப்புரிமைத் தேர்வாகக்  கொள்ள வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top