Connect with us
Cinemapettai

Cinemapettai

இந்த ஃபைல முதல்ல எடுங்க அய்யா.. முதல்வரிடம் போட்டு கொடுத்த சேரன்

mk-stalin-cheran

Tamil Nadu | தமிழ் நாடு

இந்த ஃபைல முதல்ல எடுங்க அய்யா.. முதல்வரிடம் போட்டு கொடுத்த சேரன்

வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுக்க பரவலாக பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கனமழையின் காரணமாக நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. தண்ணீர் அதிகமாக இருப்பதன் காரணத்தால் கார்களை இன்று வேளச்சேரி மேம்பாலம் மீது உரிமையாளர்கள் நிறுத்தி வருகின்றனர்.

இன்று நமது முதலவர், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்றார்.

மேலும் மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமான பணிகளை தொடங்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நடிகர் மற்றும் இயக்குனர் சேரன்  ட்விட்டரில் முதல்வரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். தி நகர் கிரியப்பா ரோட்டில் வசிப்பவரின் டீவீட்டில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்.

“மழை பாதிப்பு வந்தால் தண்ணீர் தேங்காமல் வெளியேற திட்டம் தீட்டி சென்னைக்கு மட்டும் மத்திய அரசிடம் 900 கோடிக்கு மேல் வாங்கினார்களே முந்தைய ஆட்சியில்.. இதுதான் அந்த திட்டத்தில் செயல்படுத்திய நகரமா.. இந்த ஃபைல முதல்ல எடுங்க அய்யா. என்று தனியும் இந்த..”

இவ்வாறு ஊழலை சுட்டி காட்டி நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார் சேரன்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top