Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆட்டோகிராப் படத்தில் முதலில் சேரன் இல்லையாம்.. அடக்கடவுளே! இந்த நடிகர கற்பனை கூட செய்ய முடியலையே
2004ஆம் ஆண்டு சேரன் தயாரித்து, இயக்கி நடித்து வெளிவந்த ஆட்டோகிராப் படம் தமிழ் சினிமா வரலாற்றின் மைல்கல் என்றே கூறலாம். பள்ளி பருவத்தில் வரும் காதல், கல்லூரிப் பருவத்தில் வரும் காதல் பின்பு அலுவலகத்தில் வரும் நட்பு என்று வெவ்வேறு கோணங்களில் சேரன் நடித்திருப்பார்.
இந்த படத்தில் காதல் தோல்வி ஏற்பட்டபோது குடித்து விட்டு ஒரு இளைஞன் எப்படி வாழ்க்கையை அழித்துக் கொள்கிறான் என்பதை தத்ரூபமாக காமிக்க வேண்டும் என்று காட்சிகளை அமைத்தார்களாம். அதாவது சேரன் நன்கு குடித்துவிட்டு படக்காட்சியில் உண்மையாகவே வாந்தி எடுத்தாராம் அந்த அளவிற்கு கதாபாத்திரத்தில் ஒன்றி நடித்திருப்பார் சேரன்.
பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்த கே.எஸ்.ரவிக்குமாரின் சிஷ்யன் என்பதை தமிழ் சினிமாவிற்கு நிரூபித்தார். ஏனென்றால் இந்தப் படம் பல விருதுகளை தட்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதற்கு முதலில் தளபதி விஜய்க்கு வாய்ப்பு கிடைத்ததாம்.
தளபதி விஜய்யை சந்தித்து சேரன் கதைக் கூறியதாகவும், ஆனால் தளபதி அப்போது திருமலை மற்றும் கில்லி படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இது போன்ற படங்களை ரசிகர்கள் இன்றளவும் ரிப்பீட் மோடில் பார்த்துதான் வருகின்றனர். இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும் ஆனால் அந்த மாஸ் ஹீரோ அந்தஸ்து கிடைத்திருப்பது சந்தேகம்தான்.
சேரன் தனது அடுத்த படமான தவமாய் தவமிருந்து இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க உள்ளதாகவும் அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற காதல் காவிய படங்களை சேரன் போன்ற இயக்குனர்கள் மட்டுமே உருவாக்க முடியும்.
தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் கவனம் செலுத்தி வரும் விஜய்சேதுபதி இது போன்ற படங்களில் நடித்தால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
