Sports | விளையாட்டு
தோனிக்கு பின் மேட்ச் வின்னராக உருவெடுக்கும் வீரர்.! குவியும் பாராட்டுக்கள்
நேற்று 49வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இறுதி ஓவர் இறுதிப் பந்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. இக்கட்டான சூழ்நிலையில் இறங்கிய ஜடேஜா சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
முதலில் ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நித்திஷ் ராணா 61 பந்துகளில் 87 ரன்களை குவித்தார்.
பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி வரை பரபரப்பாக சென்ற ஆட்டத்தை சிக்ஸர் அடித்து ரவீந்திர ஜடேஜா முடித்து வைத்தார்.
கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 சிக்சர்களை அடித்து சென்னை அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றார்.
தோனிக்கு பின் மேட்ச் வின்னர் என்றால் அது ரவிந்திர ஜடேஜாவின் என்று வர்ணனையாளர்கள் பாராட்டினார். இந்த ஐபிஎல் சீசனில் சுரேஷ் ரெய்னா இல்லாத குறையை ரவீந்திர ஜடேஜா போக்கி விட்டார் எனவும் பாராட்டினார்.

ravindra-jadeja
