தமிழ் சினிமாவில் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதி பிரபலமாகிவருகிறார் கவிஞர் ஜெயங்கொண்டான். தற்போது கவுண்டமனி நடிக்கயிருக்கு சட்டமன்றத்தில் பேய் உள்பட 4 படங்களுக்கு மேல் பாடல்களை எழுதி வருகிறார்

தமிழாலும், தமிழ் சினிமாவாலும் வாழ்ந்து வருபவர்களின் சற்றே வித்தியாசமானவர் பாடலாசிரியர் ஜெயங்கொண்டான். தன்னால் இயன்றவரை தமிழ் சினிமாவை வாழவைக்கும் முகமாக களமிறங்கியிருக்கிறார் கவிஞர் ஜெயங்கொண்டான். சென்னை கே.கே.நகரில் கவிஞர் கிச்சன் என்ற பெயரில் உணவகத்தை நடத்தி வரும் இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். அப்போது இவருக்கு ஆதரவாக நடிகர் கஞ்சா கருப்பு களம் இறங்கினார்.

அப்போது தேர்தல் வாக்குறுதியாக ஜெயங்கொண்டம் தொகுதியில் உள்ள ஏந்தல் கிராமந்தில் பாழடைந்து இருக்கும் கோவிலை புதுப்பித்துத் தருவதாக கூறியிருக்கின்றனர். ஆனால், தேர்தலின் போது தன்னால் போதுமான வாக்குகளை பெறாவிட்டாலும், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தற்போது கோவில் கட்டி வருகிறார். பிரச்சாரத்தின் போது அவருக்கு ஆதரவாக களம் இறங்கியதால் தன் பங்கிற்கு தன்னால் முடிந்த பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் கஞ்சா கருப்பு.