Sports | விளையாட்டு
IPL2020 ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா CSK? ஏலத்தில் தட்டி தூக்கிய வீரர்களின் முழு விவரம்
ஐபிஎல் தொடங்கிய காலத்திலிருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் மகேந்திரசிங் தோனி .சென்னை இவருக்கு இரண்டாவது தாய்வீடு என்று கூறினால் மிகையாகாது. அந்த அளவு ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர்.
மேலும் சென்னை அணியை இந்தியா முழுவதும் ரசிக்கக்கூடிய அணியாக மாற்றியவர். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் மேட்ச் பிக்சிங் என்பதில் சிக்கி ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது. அதன் பிறகு உள்ளே வந்த உடனே கோப்பையை கைப்பற்றி சாதித்தது.
கடந்த வருடம் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சென்னை அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோற்றது. தற்போது 2020 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
இதில் சென்னை அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வீரர்களை வாங்கியதா என்பதை பார்ப்போம். மொத்தம் நான்கு பேருக்கான இடம் காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாம் கரன் :
இங்கிலாந்து அணியின் இடதுகை ஆல்ரவுண்டர் சாம் கரன், சூப்பர் கிங்ஸ் அணி 5.5 கோடிக்கு வாங்கியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

sam-curran
பியூஸ் சாவ்லா :
சென்னை அணி சார்பில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் பியூஸ் சாவ்லா. லெக் ஸ்பின் பந்து வீச்சாளரான இவரை சென்னை அணி 6.75 கோடிக்கு வாங்கியது. ஆனால் சத்தியமாக எதற்கென்றே புரியவில்லை என சிஎஸ்கே ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

sam-curran
ஜாஸ் ஹேசில்வுட் :
ஆஸ்திரேலியா பாஸ்ட் பவுலர் ஜாஸ் ஹேசில்வுட், 2 கோடிக்கு சென்னை அணியால் வாங்கபட்டார். டெஸ்ட் பவுலர் ஆன இவரை சென்னை அணி வாங்கியது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

josh-hazlewood
சாய் கிஷோர் :
தமிழக அணிக்காக விளையாடி வரும் சாய் கிஷோர்-ஐ சென்னை அணி 20 லட்சத்திற்கு ஏலம் எடுத்தது.

sai-kishore
