fbpx
Connect with us

Cinemapettai

சென்னை சில்க்ஸ் மொத்த கட்டிடத்தையும் இடிக்க முடிவு.! அணைக்க தண்ணீர் செலவு மட்டும் 30 லட்சம்

ChennaiSilks_EPS

News | செய்திகள்

சென்னை சில்க்ஸ் மொத்த கட்டிடத்தையும் இடிக்க முடிவு.! அணைக்க தண்ணீர் செலவு மட்டும் 30 லட்சம்

சென்னை தி.நகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடை நேற்று முன்தினம் அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டு கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. தீயினால் ஏற்பட்ட புகை மண்டலமே தீயை அணைப்பதற்கு பெரம் சவாலாக இருந்தது. இதனால், தி.நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீவிபத்து ஏற்பட்டவுடன் அதிகாரிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். 4 மாடிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் 7 மாடிகள் கட்டியுள்ளனர் என்று கூறுகின்றனர். 4 மாடிகளுக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகளுக்கு 7 மாடிகள் கட்டியதை இத்தனை ஆண்டுகாலம் பார்க்காமல் இருந்திருப்பார்களா என்ன?

இன்னும் எத்தனை காலம் தான் மக்களை நம்ப வைப்பதற்கு அதிகாரிகள் இந்த கேள்விகளை கேட்பார்கள்.தீவிபத்தால் 1600க்கும் மேற்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடுகளை செய்த வேலை வழங்க நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. மேலும் தரைத்தளத்தில் ஜென் செட் இயக்குவதற்கு டீசல் பேரல்கள் வைக்கப்பட்டுள்ளன. அதன் அருகிலேயே வாடிக்கையாளர்களுக்கு துணிகள் வழங்குவதற்கான கட்டைப்பைகள் மற்றும் பலவிதமான வடிவங்களிலான பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

மின்கசிவால் ஏற்பட்ட தீப்பொறி டீசல் பேரல்களில் விழுந்ததால் தீ பிடித்துள்ளது. அங்கு பரவிய தீ அப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பைகளுக்குப்பரவி மற்ற தளங்களிலும் பிடித்துக்கொண்டது. விபத்தில் முற்றிலும் உருக்குலைந்து கிடக்கும் கட்டிடத்தை தமிழக அரசு இடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் நேற்று முதலே இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

நமது அதிகாரிகளும் இந்த தீ விபத்திற்குப்பின்னர் தூக்கத்தில் இருந்து விழித்துள்ளார்கள். தற்போது தான் கட்டிடங்களின் பாதுகாப்புகள் குறித்து பல கடைகளிலும் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இது இந்த அசம்பாவித சம்பவத்தின் தொடர்ச்சியாக மீறினால் ஒரு வாரம் சோதனைகள் நடத்துவார்கள். பின்னர் அந்த சம்பவம் மறந்து போகும். மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்படும் வரை அதிகாரிகள் தூங்கிவிடுவார்கள். இது தானே தமிழ்நாட்டில் வாடிக்கையாக நடக்கும் விஷயம்?? தீ அணைக்க தண்ணீர் செலவு மட்டும் 30 லட்சம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top