Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னை ஷாப்பிங் மாலில் பரபரப்பு; நள்ளிரவில் சுற்றி வளைத்த கமாண்டோ படை
சென்னை: ஷாப்பிங் மாலை கமாண்டோ படையினர் நள்ளிரவில் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 2 மணியளவில் ஷாப்பிங் மாலை கமாண்டோ படையினர் திடீரென சுற்றி வளைத்தனர். அவர்கள் ஆயுதம் தாங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்திருந்தனர். ஷாப்பிங் மாலை சுற்றியுள்ள நுழைவுப் பாதைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யாரையும் உள்ளேயும் அனுமதிக்கவில்லை. வெளியேயும் செல்லவிடவில்லை. இதனால் மாலில் காவலுக்காக நின்றிருந்த காவலாளிகள் அச்சமடைந்தனர்.
அப்போது இரவு காட்சி சினிமா முடிந்து, பொதுமக்கள் வெளியே வந்தனர். அவர்கள் கமாண்டோ படையைக் கண்டு பதற்றம் அடைந்தனர். விரைவாக வெளியேற முயன்ற அவர்களை கமாண்டோ படையினர் தடுத்து நிறுத்தினர். அதன் காரணமாக, ஏதோ விபரீதம் நிகழப் போவதாக அச்சம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து, கமாண்டோ படையினர் கலைந்து சென்றனர். இது தமிழக காவல் துறை கமாண்டோ பிரிவின் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
