fbpx
Connect with us

Cinemapettai

சென்னை – விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

Ashwin-Sunder

News | செய்திகள்

சென்னை – விபத்தில் கார் ரேஸர் அஸ்வின் சுந்தர் பலி!

சென்னையைச் சேர்ந்த மிகப் பிரபலமான கார் ரேஸர் அஸ்வின் சுந்தர்(31). அஸ்வினும் அவர் மனைவியும் இன்று அதிகாலை சென்னை எம்.ஆர்.சி நகர் அருகே பி.எம்.டபிள்யூ Z4 காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதால் தீப்பிடித்துக்கொண்டது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பல கார் பந்தயங்களில் கலந்துகொண்டு தேசிய அளவில் பட்டங்களை வென்றவர் அஸ்வின். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார் பந்தயங்களில் அவர் பங்கேற்றுள்ளார். கடந்த ஆண்டு நிவேதிதா என்ற மருத்துவரை அவர் திருமணம் செய்து கொண்டார். சென்னை ஆலப்பாக்கத்தில் மனைவி நிவேதிதாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஹோட்டல் ஒன்றில் உணவு அருந்திவிட்டு எம்.ஆர்.சி. வழியாக தனது பி.எம்.டபுள்யூ காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது ஒரு திருப்பதில் கார் தனது கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி தீப்பிடித்தது. பிளாட்பாரத்திற்கும், மரத்திற்கும் நடுவில் கார் நின்றதால் கதவை திறக்க முடியாமல் இருவரும் சிக்கிக்கொண்டனர். தீ பரவுவதை கண்டு அங்கிருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Ashwin-Sunder-Racer-Chennaiஇருப்பினும் அஸ்வினும், அவரது மனைவி நிவேதிதாவும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த அடையாறு போக்குவரத்துத்துறை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரது உடலும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இளம் வயதில் இருந்தே மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம்காட்டியவர் அஸ்வின். 2003ல் இருந்து 2013-ம் ஆண்டு வரை ரேஸ்களில் அஸ்வின் காட்டிய திறமை அபாரமானது. தொடர்ந்து சாம்பியன் பட்டங்கள் வென்று அசத்தியவர். அவருடைய மறைவு, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

https://www.facebook.com/saddy.cena/videos/10206307716010394/

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top