Tamil Cinema News | சினிமா செய்திகள்
சென்னை புள்ளிங்கோவால் விஜய் 4வது முறையாக பெரும் சாதனை
விஜய் படம் பொதுவாக வசூலில் எப்பவுமே டாப் லெவலில் தான் இருக்கும். சமீபகாலமாக வெளிவந்த படங்களை போல் பிகிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.
விஜய் படம் குறித்து என்ன தான் எதிர்மறை விமர்சனங்கள், எதிர்ப்புகள் வந்தாலும் படம் வசூலை பாதித்தது கிடையாது.
உதாரணத்திற்கு தெறி, மெர்சல். சர்கார் ஆகிய மூன்று படங்களுமே எதிர்ப்புகளை கடந்து தான் வெளியானது. குறிப்பாக மெர்சல் சர்கார் பெரும் எதிர்மறையான போராட்டங்களை கடந்து வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.
இந்நிலையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 25ம் தேதி வெளியான பிகில் திரைப்படம் சென்னை நகரில் மட்டும் 10 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. புள்ளிங்கோ என்ற மெட்ராஸ் தமிழ் வார்த்தையில் சொல்வதென்றால் சென்னையில் புள்ளிங்கோ பிகிலை தூக்கி கொண்டாடியிருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னதாக தெறி , மெர்சல், சர்கார், படங்களை தொடர்ந்து 4வது படமாக பிகிலும் 10 கோடி வசூலை சென்னையில் ஈட்டியிருப்பதாக சொல்கிறார்கள். இதன் மூலம் தளபதி விஜய்யின் 4 படங்கள் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருவது தெரியவந்துள்ளது.
