Tamil Nadu | தமிழ் நாடு
ஆபாச பட விவகாரத்தில் சென்னையில் சிக்கிய 30 பேர்.. லிஸ்டுடன் களத்தில் இறங்கிய போலீசார்
நாளுக்கு நாள் ஆபாசபட விவகாரத்தில் புதிய திருப்பங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர்தான் முதன் முதலில் கைது செய்யப்பட்டார்.
இவர் குழந்தைகள் சம்பந்தபட்ட ஆபாச வீடியோக்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை மாநகரத்தில் சுமார் 30 பேருக்கு மேல் குழந்தைகள் சம்பந்தபட்ட ஆபாச வீடியோக்களை பகிர்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில் அந்த 30 பேரின் விலாசம் மற்றும் விவரங்களை அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என டிஜிபி ரவி சமீபத்தில் பெண்கள் கல்லூரிகளில் நடந்த விழா ஒன்றுக்கு சென்ற போது குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் கூறியது, படிக்கும் வயதில் ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், இதனால் டெக்னாலஜிக்கு அடிமையாகி நம்மளை நாமே தொலைத்துக் கொண்டிருக்கிறோம் எனவும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
என்னதான் ஆபாச பட விவகாரத்தில், விவரங்கள் தெரிவிக்கப்பட்டாலும் இன்னும் நம் இளைஞர்களிடையே கொஞ்சம் டர்ரு இருக்கத்தான் செய்கிறது.
