fbpx
Connect with us

Cinemapettai

சென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சென்னையெல்லாம் இல்லை..நான் மும்பை இந்தியன் ரசிகன் : நயனின் நாயகன்

தமிழ் சினிமாவின் காமெடி நாயகன் யோகி பாபு, நான் சிஎஸ்கேலாம் இல்லை. மும்பை இந்தியன்ஸ் ரசிகன் என ட்வீட் தட்டி இருப்பது வைரலாக பரவி வருகிறது.

ஐபிஎல்லின் 11 வது சீசன் போட்டிகள் கடந்த மாதம் தொடங்கியது. முதலில் நடைபெற்ற லீக் சுற்றுகள் எப்போதும் போல பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்றது. இதில், முதல் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் சுலபமாக தகுதி பெற்று விட, மற்ற இரு இரண்டு இடங்களுக்கு எல்லா அணிகளும் கடும் முயற்சி செய்தது. இதில் அதிக வாய்ப்பு மும்பைக்கு இருந்த நேரத்தில் கடைசி போட்டியில் தோற்று லீக் சுற்றோடு வெளியேறியது. இதை தொடர்ந்து, தற்போது ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளன. 3 முறை சாம்பியன் பட்டத்தை பெற்ற மும்பைக்கு ரசிகர்கள் ஏராளம். சிஎஸ்கேவும், மும்பையும் கிரிக்கெட்டின் தல, தளபதி என சொல்லும் அளவுக்கு மீம் பஞ்சாயத்துக்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம். மும்பையின் வெளியேற்றத்தை சென்னை ரசிகர்கள் கலாய்த்து மீம்களை பதிவிட்டு இருக்கிறார்கள். இதில் குறிப்பிட்ட ஒரு மீம், கல்யாண வயசு பாடலில் இருந்து யோகி பாபு, நயனை வைத்து சித்தரிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அந்த மீம்மை தனது டுவிட்டரில் வெளியிட்ட யோகி பாபி, இல்லை. நான் மும்பை இந்தியன்ஸ் ரசிகன். இப்படிலாம் மீம் செய்யாதீர்கள் என கோரிக்கை விடுத்து இருக்கிறார். இப்பதிவிற்கு மும்பை ரசிகர்கள் பெரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில், சிஎஸ்கே மக்களும் அவரை தொடர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, தற்போது ஒரே நேரத்தில் தல மற்றும் தளபதியுடன் நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கும் யோகி பாபுவிற்கு கல்யாண வயசு பாடல் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. வெளிவந்த சில நாட்களில், 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் யு -ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்து இருக்கும் பாடலுக்கு சிவகார்த்திகேயன் வரிகளை எழுதி கொடுத்ததும் மேலும் சிறப்பாக கருதப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top