Connect with us
Cinemapettai

Cinemapettai

zomato

Tamil Nadu | தமிழ் நாடு

சொமாட்டோ நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி

பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி சுமார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

ஏன்?

பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு பரவாமல் இருக்க மழை நீரை தேங்க விடாமல் இருக்க மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள சொமாட்டோ அலுவலகத்தில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு நடத்தினார்.

ஆய்வு தொடர்பாக பேட்டி கொடுத்த ஆய்வாளர் மதுசூதனன், சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சொமாட்டோ நிறுவனத்தில் ஆய்வுக்குச் சென்ற போது அதன் மாடிப் பகுதியில் பயன்படுத்தப்படாத டெலிவரி பேக்குகள் மழை நீரில் மூழ்கிக் கிடந்தன.

இதனால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி அதிகமாக வாய்ப்பு உள்ளது. மேலும் இதனால் அங்குள்ள ஊழியர்களுக்கு டெங்கு நோய் தொற்றும் வாய்ப்புள்ளது என்பதால் அந்த நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும் அதற்கு சொமாட்டோ நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும், மேலும் தங்களது அலுவலகங்களை சுத்தமாக வைத்திருப்போம் என்றும் உறுதி அளித்ததாக கூறினார். மேலும் மக்களும் சுகாதாரமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top