fbpx
Connect with us

Cinemapettai

சாப்ட்வேர் கம்பெனி ஆபிஸ் லிப்ட்டில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சின்மயி வெளியிட்ட ட்விட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சாப்ட்வேர் கம்பெனி ஆபிஸ் லிப்ட்டில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. சின்மயி வெளியிட்ட ட்விட்

பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது பாலியல் தொல்லை கொடுத்த செய்தியை வெளிப்படையாக தெரிவித்தவர். அதன்பிறகு அவரை எந்த இசையமைப்பாளரும் பாட அழைக்கவில்லை. சமீபத்தில் ஏ.ஆர். ரகுமான், தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பிகில் படத்தில் மாதரே மாதரே என்ற பாடலை பாட வாய்ப்பளித்தார்.

அதுமட்டுமில்லாமல் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்படும் பெண்கள் அனைவருக்கும் நீதி வாங்கிக் கொடுப்பதில் உறுதியாக இருப்பவர். அதனடிப்படையில் நிறைய உதவிகளும் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் ஒரு இளம்பெண் தனக்கு நடந்த பாலியல் தொல்லையை பற்றி சின்மயிடம் கூறியுள்ளார். அந்தப் பெண் லிப்டில் வரும் போது உடனிருந்த ஆண் அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி வருத்தப்பட்டிருக்கிறார்.

இதற்கு உடனே சின்மயி, போலீசில் புகார் கொடுக்கலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் அந்தப் பெண்ணோ, தனக்கு வரன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இந்த விஷயம் அதற்கு தடையாக இருக்கும் என்பதற்காகவும் மேலும் தன் பெற்றோர்கள் வருத்தப்படுவார்கள் என்பதற்காகவும் வேண்டாம் என கூறிவிட்டார்.

இதை மிகவும் உருக்கத்துடன் சின்மயி பதிவிட்டுள்ளார். இதேபோல் இன்னும் எவ்வளவு பெண்கள் மானத்திற்கு பயந்து வெளியே சொல்லாமல் இருக்கிறார்களோ தெரியவில்லை.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top