சென்னையில் கடந்த 5-ந் தேதி சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. தமிழக அரசின் ஆதரவுடன் இண்டோ சினி அப்ரிசேஷன் பவுண்டேசன் என்ற அமைப்பு நடத்தியது. ஒரு வாரம் நடந்த இந்த பட விழாவில் 47 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 படங்கள் திரையிடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக தமிழ் படங்களின் போட்டிப்பிரிவில் 12 படங்கள் திரையிடப்பட்டது. இதில் ஜோக்கர் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. நேற்று நடந்த நிறைவு விழாவில் இயக்குனர் ராஜுமுருகனுக்கு அதற்கான விருதை இயக்குனர் கே.பாக்யராஜ் வழங்கினார். இரண்டாவது பரிசு தர்மதுரைக்கு கிடைத்தது. இயக்குனர் சீனு ராமசாமியும், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூம் அதற்கான பரிசை பெற்றுக் கொண்டனர். சிறந்த படத்துக்கான ஜுரி விருது சில சமயங்களில் படத்துக்கு கிடைத்தது. அதனை இயக்குனர் பிரியதர்ஷன் பெற்றுக் கொண்டார். போட்டியின் நடுவர் குழுதலைவராக கே.பாக்யராஜ் பணியாற்றினார். நேற்றைய நிறைவு விழாவுக்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தலைமை தாங்கினார்.