Tamil Nadu | தமிழ் நாடு
நடிகை ஹன்சிகா மீதான புகார்… போலீசுக்கு கிடக்குபுடி கொடுத்த சென்னை உயர் நீதி மன்றம்!!
சென்னை: இயக்குனர் ஜமீல் மஹா என்ற படத்தை இயக்கி அதில் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இந்த போஸ்டரில் ஹன்சிகா மோத்வானி காவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது என்று வீ.ஜி.நாராயணன் புகார் அளித்துள்ளார்.
இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் ஆன வீ.ஜி.நாராயணன் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இதைப் பற்றி புகார் அளித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையிலும் பெண்கள் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

maha
போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நாராயணன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
