Tamil Nadu | தமிழ் நாடு
பைக் ரேஸால் பதறும் சென்னை.. அதிகாலையில் அட்டகாசம் செய்யும் இளைஞர்கள்
சென்னை என்றாலே இரவு நேரங்களில் பைக் ரேஸ் மிகவும் பேமஸ். அதுவும் ஈசிஆர் பகுதிகளில் சொல்லவே வேண்டாம். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி தங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்வார்கள்.
இவற்றை சமீபகாலமாக காவல்துறையினர் அடக்கி ஒடுக்கி போட்டிகள் நடைபெறாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் மீண்டும் பைக் ரேஸ் தலைதூக்கியுள்ளது. அந்தவகையில் நேற்று காலை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிவேகம் கொண்ட பைகளைக் கொண்டு ரேஸ் நடத்தியுள்ளனர்.
ஜெமினி பாலம் முதல் ஆர்கே சாலை வரை போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிவேகத்தில் சென்ற பைக்குகளில் ஒருவர், ஆர்கே சாலையை கடக்க முயன்ற ஒரு வண்டியின் மீது தாறுமாறாக மோதியுள்ளனர். இதில் பின்னாடி அமர்ந்து இருந்த ஒருவர் தூக்கி வீசி எறியப்பட்டார்.
மேலும் இருவரும் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்த செய்தியை அறிந்த காவல்துறையினர் உடனடியாக பைக் ரேஸ் நடத்தியவர்களை கையும் களவுமாக கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த வாட்டி எவ்வளவு பேர் பாத்ரூமில் வழுக்கி விழுவார்கள் என தெரியவில்லை என்கிறது காவல்துறை வட்டாரம்.
