சென்னை தினம் என்பது தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படும் கி.பி. 1639, ஆகஸ்ட் 22 ஆம் நாளை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பெற்ற ஒரு சிறப்பு நாள் ஆகும்.

இந்நாள் 2004 ஆம் ஆண்டில் இருந்து நினைவு கூரப்பட்டு வருகிறது

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

சென்னை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்

  • மெரீனா – 1884-ல் Grant Duff பெயர் வைத்தார்
  • திலகர் திடல் – 1908-ல் சுப்ரமணிய சிவா பெயர் வைத்தார்
  • சீரணி அரங்கம் – 1970-ல் அண்ணா அமைத்தார். ஆனால் மறைந்த ஜெயலலிதா ஆட்சியில் அது இடிக்கப்பட்டது.
  • தலைநகரம் – 1688ல் இரண்டாம் ஜேம்ஸ் மன்னர்சென்னையை முதல் நகர அவையாக அறிவித்தார்
  • சென்னை – 1996 மதராஸ் பெயர் மாற்றப்பட்டு சென்னையானது
  • செயின்ட் தாமஸ் கோட்டை – 1522ல் போத்துக்கீசியர்கள் கட்டினர்
  • நினைவுச் சின்னம் – 1989ம் ஆண்டு நடந்த 350ம் ஆண்டு கொண்டாட்டத்தில்  அமைக்கப்பட்டது.
  • அஞ்சல் உறை – 2007ம் ஆண்டு நடந்த சென்னை தினத்தில் வெளியிடப்பட்டது

விரைவில் சென்னை மெட்ரோ பாலிட்டன் சிட்டியாக அறிவிக்கப்பட உள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: Love You Dear Chennai