ஜல்லிக்கட்டுப் போராட்டக் களத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கையே தமிழரின் ஒழுக்கம்-கண்ணியத்தை உலகம் முழுக்க பறை சாற்றுகிறது. அதேவேளை, அப்பாவிகளை அடித்து உதைத்து ரத்தக்களறியாக்கியதும், குடியிருக்கும் வீட்டுக்கு தீ வைப்பதுமாக தமிழகக் காவல்துறை ஆடிய கோர ஆட்டம் வீடியோ ஆதாரங்களாக காக்கிகளின் கயமைத் தனத்தை தோலுரித்துக் காட்டிவருகிறது. ஆனால், செய்த தப்புக்கு நியாயம் கற்பிக்கும் வகையில்,  போராட்டக்காரர்களுக்கு ‘சமூக விரோதிகள்’ பட்டம் கட்டித் தப்பிக்கப் பார்க்கும் தமிழகக் காவல்துறைக்கு எதிராக கேள்விகளை எழுப்புகிறது இந்த வீடியோ…!