Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் சென்னையில் மாஸ் காட்டியது.! தானா சேர்ந்த கூட்டமா? ஸ்கெட்சா? வசூல் நிலவரம்.!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கலையரசன், செந்தில், ரம்யாகிருஷ்ணன், கார்த்திக், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் தானா சேர்ந்த கூட்டம்.
இப்படம் தமிழில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சூர்யா .
மேலும் இப்படத்தினை தெலுங்கிலும் கேங் என்ற பெயரில் ரிலீஸ் செய்தனர். அங்கு படம் வெளியாகி மாஸ் கலெக்ஷன் குவித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரும் வர்த்தக பகுதியான சென்னையில் நேற்று வரை தானா சேர்ந்த கூட்டம்- ரூ 5.80 கோடி வசூல் செய்துள்ளது.
விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச்.இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் பொங்கலுக்கு உலகெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது இவர்களின் இரண்டு படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ஆனால் ஸ்கெட்ச் படம் கொஞ்சம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.இந்நிலையில் தமிழகத்தின் மிகப்பெரும் வர்த்தக பகுதியான சென்னையில் ஸ்கெட்ச் நேற்று வரை ஸ்கெட்ச்- ரூ 2.84 கோடி வசூல் செய்துள்ளது.
