fbpx
Connect with us

Cinemapettai

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றப்பட்டுள்ளது..!  என்ன பெயர் தெரியுமா?

chennai-central

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றப்பட்டுள்ளது..!  என்ன பெயர் தெரியுமா?

சென்னை சென்ட்ரலுக்கு புரட்சித் தலைவரின் பெயர் சூட்டிய தமிழக அரசு..!

ஒரு சில வருடங்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று வலுவான கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டே போனதால்.

அதுமட்டுமல்லாமல் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் மக்களவைத் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது அதில் பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

திரையுலகம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள எம்.ஜி.ஆர் பிறந்த இடத்தை இலங்கை சென்றபோது பார்த்ததாக மோடி தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top