fbpx
Connect with us

Cinemapettai

சென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்

mp-thabitha

Tamil Nadu | தமிழ் நாடு

சென்னையில் உருவாகும் ஒரு பெண் உசேன் போல்ட்

மாநில பள்ளி தடகள போட்டியில் சென்னை வீராங்கனை அசத்தியுள்ளார் அது பற்றிய சிறு தொகுப்பு.

67 குடியரசு தின மாநில அளவிலான தடகளப் போட்டியில் சென்னையை சேர்ந்த வீராங்கனை நான்கு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். நெய்வேலியில் உள்ள பாரதி ஸ்டேடியத்தில் இந்த போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

இதில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள ஜெயகோபால் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியான பி.எம்.தாபிதா 100 மீட்டர் ஓட்டம், 100மீட்டர் தடை ஓட்டமும், நீளம் தாண்டுதல், triple jump ஆகிய பந்தயங்களில் தங்கப்பதக்கங்களை வென்று அசத்தி உள்ளார்.

இதில் அவர் ஒரு சாதனையை படைத்துள்ளார். அவர் நீளம் தாண்டுதலில் 5.90 மீட்டர் தூரம் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளார். தாபிதா சென்னை பிராட்வேயில் உள்ள ஜெயின் ஜோசப் ஸ்போர்ட்ஸ் எனும் அகாடமியில் உள்ள நாகராஜனிடம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்த செயல் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சினிமாபேட்டையில் சார்பாக வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top