chennai-28-part-2வெங்கட் பிரபு இயக்குனராக அறிமுகமாகிய சென்னை 28 திரைப்படம் கடந்த 2007-ம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது. இன்றளவும் இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் மீண்டும் உருவாகபோவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைதொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இணைந்து நடிக்கவுள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.