கடந்த 2008ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு ‘சென்னை 600028’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் அஜித்தின் ‘மங்காத்தா” உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, தற்போது ‘சென்னை 600028’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  ஷூட்டிங்கிற்காக பைக்கில் சென்ற நடிகைக்கு நேர்ந்த கதி...

இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்... ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்

இந்த படம் வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஜெய், சிவா, விஜயலட்சுமி உள்பட முதல் பாகத்தில் படத்தில் அனைவரும் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்,.