12tamil-movies
12tamil-movies

16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா!

சென்னையில் 16-வது சென்னை சர்வதேச திரைப் பட விழா எதிர்வரும் டிசம்பர்13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்க உள்ளது. இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இவ்விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தமிழ் படங்கள் 20 திரையிட தேர்வுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் தேர்வுக்குழு 12 படங்கள் மட்டுமே தேர்வு செய்து திரையிட முடிவு எடுக்கப்பட்டுள்ளன.

16th-film-festival
16th-film-festival

இதில் எந்த பிரபல நடிகர் படமும் தேர்வாகவில்லை என்பது அதிர்ச்சிக்குள்ளான தாகும். ஏனென்றால் பிரபலங்களின் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆனாலும் மக்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கும் என்பதை கணக்கிட முடியாது. கீழே குறிப்பிட்டுள்ள 12 படங்களும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று 50 முதல் 100 நாட்கள் ஓடிய படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான ரஜினியின் 2.o மற்றும் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படம் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்பது ரசிகர்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விழாவில் திரையிட போகும் படங்களின் பட்டியல் கீழே,

  1. மெர்குரி
  2. அண்ணனுக்கு ஜே
  3. வேலைக்காரன்
  4. இரவுக்கு ஆயிரம் கண்கள்
  5. 96
  6. கடைக்குட்டி சிங்கம்
  7. இரும்புத்திரை
  8. அபியும் நானும்
  9. ஜீனியஸ்
  10. ராட்சசன்
  11. பரியேறும் பெருமாள்
  12. வடசென்னை