Tamil Nadu | தமிழ் நாடு
சென்னையில் ஒரு ரூபாய்க்கு சட்டை.. ரூ.10க்கு நைட்டிகள் விற்பனை
Published on
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒரு துணிக்கடையில் ஒரு ரூபாய்க்கு சட்டை.. ரூ.10க்கு நைட்டிகள் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு மணிகண்டன் 5 வது சந்து பகுதியில் பெருமாள் டெக்ஸ் என்ற துணி கடை அமைந்துள்ளது. இங்கு காலை 10 முதல் 11 மணி வடசென்னை பகுதியை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் தீபாவளி பண்டியை கொண்டாடும் வகையில் சேவை செய்தனர்.
யாருக்கும் இலவசமாக துணிகளை கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் ரூ.1 க்கு ஆண்களுக்கு புதிய சட்டையும், ரூ.10 க்கு பெண்களுக்கு நைட்டியும் வழங்கி வருகிறார்கள்.
ஒரு நாளைக்கு 50 பேர் வீதம் கடந்த 19 ஆம் தேதி முதல் இந்த ரூ.1 க்கான ஆடை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இலவசமாக இல்லாமல் தங்களுடைய பணத்திலேயே துணி எடுக்கிறேன் என்ற எண்ணத்தில் இங்கு ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.
