fbpx
Connect with us

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் ஜோடி யார் தெரியுமா?

Chekka Chivantha Vaanam

News | செய்திகள்

செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் ஜோடி யார் தெரியுமா?

செக்க சிவந்த வானம்:

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்துள்ள நடிகை குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Chekka Chivantha Vaanam

Chekka-Chivantha-Vaanam

தமிழ் சினிமாவில் ஸ்டார் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் எல்லா படங்களுமே வித்தியாசமாக பேசும். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் மற்றும் நாயகிகளை வைத்து பிரம்மாண்டமாக அவர் இயக்கி இருக்கும் படம் செக்க சிவந்த வானம். இப்படத்தை லைகா புரோடக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்து இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிந்து, அடுத்த கட்ட பணிகளில் படக்குழு பிஸியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு நாயகர்களாக நடிக்கும் இப்படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். இதில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி ராவ் என சில நாயகிகள் இருந்தாலும் இதில் யார் யாருக்கு ஜோடி என்ற தகவல் வெளியாகாமலே இருந்தது. தொடர்ந்து, அரசியல்வாதியாக நடிக்கும் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருக்கிறார் என தகவல்கள் தெரிவித்தது. காவல்துறை வேடத்தில் விஜய் சேதுபதியும், சிம்பு இன்ஜினியராகவும் நடித்து இருக்கிறார்கள்.

Chekka SIvantha Vaanamop

இந்நிலையில், சிம்புவின் ஜோடி குறித்த முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது. இப்படத்தில் சிம்புவின் நாயகியாக மாடல் டயானா எரப்பா நடிக்க இருப்பதாக தெரிகிறது. இவர்கள் இருவரின் காதல் காட்சிகளும் செர்பியாவில் படமாக்கப்பட்டுள்ளதாக படக்குழுவிற்கு நெருங்கிய தரப்பு தெரிவித்துள்ளது. ரசிகர்களிடன் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் டீசர், விரைவில், வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top