Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ் காட்டிய செக்கசிவந்த வானம்.! ஆடி போன திரையரங்கம்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் இவர் தற்பொழுது செக்கச் சிவந்த வானம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார், இந்த படத்தில் நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த்சாமி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதி, டயானா, என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் இந்த வாரம் 27 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக வெளிவர இருக்கிறது, சமீபத்தில் வெளிவந்த படத்தின் டிரைலர், மற்றும் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இதன் காரணமாக செக்கச் சிவந்த வானம் படத்தின் அதிகாலை காட்சி ஓபன் செய்யப்பட்டது , ஆனால் ஓபன் செய்யப்பட்ட 30 நிமிடத்திலேயே ஹவுஸ்ஃபுல்தான் காட்டுகிறது, மேலும் சென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட பிரபல திரையரங்கம் எங்கள் திரையரங்கில் இது தான் மிகப்பெரிய ஓப்பனிங் பெறப்போகும் படம் என அறிவித்துள்ளார்கள்.
