செக்கச்சிவந்த வானம் திரைவிமர்சனம்.! | Chekka Chivantha Vaanam movie Reviews

சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் அனைவரும் படத்திற்கு எதிர்பார்ப்பு இருப்பதில்லை,  ஒரு சில இயக்குனர்களின் படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் ரசிகர்களிடம் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினத்தின் படத்திற்கு எப்பொழுதும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருக்கும்,

மணிரத்னத்தின் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் படம் செக்க சிவந்த வானம், இந்த படத்திற்கு ரகுமான் இசையமைத்துள்ளார், மேடையில் ஏ ஆர் ரகுமான் சமீபத்தில், இந்த படத்தை பற்றி பேசிய பொழுது இது நாயகன் ஸ்டைல் படம் என்று கூறினார் அவரின் வார்த்தை தற்பொழுது உண்மையாக இருக்கிறதா என்று பார்ப்போம்.

Chekka Chivantha Vaanam
Chekka-Chivantha-Vaanam

படத்தின் கதை

படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு மிகப் பெரிய புள்ளி, இவரின் மகன்தான் அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி ட்ரைலரில் சொல்வதுபோல் மதிப்பிற்குரிய கிரிமினல் தான் பிரகாஷ்ராஜ்.
பிரகாஷ்ராஜ் ஒரு கும்பல் கொலை செய்ய முயற்சி செய்கிறது, இதனை தொடர்ந்து அவரின் மூன்று மகன்களும் யார் இதை செய்தார்கள் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்,

ஆனால் இவர்களுக்குள்ளேயே சந்தேகம் ஏற்படுகிறது ஒருவர் மீது ஒருவருக்கு, பிரகாஷ்ராஜ் ஒரு காலகட்டத்தில் இறந்துவிடுகிறார், இவரின் இடத்திற்கு அடுத்ததாக யார் வரப்போகிறார் என்று இவர்களை மூன்று பேர்களும் போட்டி போடுகிறார்கள், இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் எப்படி இறந்தார், பிரகாஷ்ராஜ் இடத்தைப் பிடித்தார் என்பது தான் மீதிக்கதை.

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, என நான்கு முன்னணி நடிகர்களை வைத்து அவர்களுக்கு சரியான கதாபாத்திரம் கொடுத்து இயக்குவது கடினம், ஆனால் இயக்குனர் மணிரத்னம், இவர்கள் நான்கு பேரும் சரியான கதாபாத்திரம் கொடுத்து பக்காவாக படத்தை இயக்கியுள்ளார், இது வேற யாராலும் செய்ய முடியாது மனிதனால் மட்டுமே முடியும் என நிரூபித்து காண்பித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  Kuttram 23 - Official Motion Poster

படத்தில் நான்கு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அரவிந்த்சாமிக்கு என்று தனி இடம் உண்டு, அரவிந்த்சாமி, தனது முரட்டு அப்பா என்ன என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு, அடிதடி வெட்டு குத்து என இவரின் வாழ்க்கை போகிறது, இவர் தனது அப்பாவின் இடத்தை பிடிக்க விரும்புவது அதற்காக இழக்கும் அனைத்தும், சோகம் வருத்தம் என இவரின் கதாபாத்திரத்தில் அசத்திவிட்டார்.

வெளிநாட்டு ஜாலி பறவைகளாக அருண்விஜய், சிம்பு. எல்லோருக்கும் ஒரே நோக்கம் பிரகாஷ்ராஜ் இடத்திற்கு யார் வருவது என்பது தான், அருண் விஜய் செம்ம ஸ்டைலிஷாக இருக்கின்றார், இவரை வைத்து எத்தனை பெரிய ஆக்‌ஷன் காட்சிகளையும் அசால்ட்டாக எடுத்துவிடலாம், அதிலும் நீச்சல் குளத்தில் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பிரமிப்பு.

சிம்பு கடைக்குட்டி, அண்ணனால் தனக்கு ஒரு வலை சுற்றப்படுகின்றது என அறிந்து அவர் ஒரு கேங்கை தேற்றி களத்தில் இறங்குகின்றார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவிற்கு பல எமோஷனில் நடிக்கும் ஒரு வாய்ப்பு, அதுவும் தன் அம்மாவிடம் ‘நீ எனக்கு மட்டும் அம்மாவா இருமா’ என்று அழும் இடத்தில் சூப்பர். இந்த சிம்பு தான் இத்தனை நாட்கள் மிஸ்ஸிங்.

படத்தில் விஜய் சேதுபதி ஒரு மௌன ராகம் கார்த்தி என்றே சொல்லலாம், ஆனால் என்ன கொஞ்சம் வயலன்ஸ் அதிகம், விஜய் சேதுபதிக்கு ப்ளஸ் என்று சொல்ல வேண்டுமென்றால் வசனம்தான், அவர் இதற்கு முன்பு நடித்த படங்களை போல் இதிலும் அவருக்கு வசனம் மிக அருமையாக பொருந்தி விட்டது, ஆனால் கடைசிவரை ரசிகர்களை ட்விஸ்ட்லேயே வைத்திருக்கிறார்.

அதிகம் படித்தவை:  உச்சகட்ட கோபத்தில் விஜய்,சிம்பு ரசிகர்கள்

மேலும் பிரகாஷ் ராஜ் தான் அதை இடம் தனக்கு தான் என கெத்தாக இருந்துள்ளார், அவர் பேசும் வசனங்கள், சொடக்கு போட்டா இந்த உயிர் போயிடும், நீ நான், நாளைக்கு பிறக்க போகிறவன் எல்லாமே ஜீரோ தான், என மாசாக தனக்கே உரிய இடத்தில் வசனம் பேசி இருக்கிறார்.

இவர்களைத் தவிர ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜெயசுதா என ஒரு பட்டாளமே நடித்து உள்ளார்கள்,  படத்தில் ஐந்தாவது ஹீரோ என்று சொல்ல வேண்டுமென்றால் அது ரஹ்மான்தான் அவர் இசையில் மிரட்டியுள்ளார், கேங்ஸ்டர் படத்தில் எப்படி இசை இருக்குமோ அதே போல் கெத்தாக போட்டுள்ளார் இசையை.

படத்தில் அனைவரையும் ரசிக்கவைத்தது படத்தின் கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு, ட்ரெய்லரில் இருக்கும் கிளைமாக்ஸ் போல் அனைவரும் நினைத்திருப்பீர்கள் ஆனால் படத்தில் அதில் தான் ட்விஸ்ட், ஒளிப்பதிவு இசை, திரைக்கதை எடுத்துச் செல்லும் விதம் என அனைத்தும் ரசிகர்களை ரசிக்க வைத்து விட்டது.

மேலும் படத்தின் இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் ஸ்லோவாக செல்கிறது மணிரத்னத்தின் படத்திற்கு உரியது என்றாலும், அதையும் ரசிக்க வைத்து விட்டார், ஆனால் நடிகைகள் படத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை மொத்தத்தில் மணிரத்தினம் மீண்டும் ஒரு கேங்ஸ்டர் படத்தில் தன்னை நிரூபித்து விட்டார்.

செக்கச்சிவந்த வானம் 3.5 / 5